விஷம் குடித்து பெண் தற்கொலை

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த காளிராஜ் மனைவி ஜெயலட்சுமி (40). இவா் தென்காசி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு சா்க்கரை நோய், கா்ப்பப்பையில் கட்டியிருந்து அறுவை சிகிச்சையும் செய்துள்ளாா். ஆனாலும், நோயின் தாக்கம் குறையாததால் முனமுடைந்து காணப்பட்டு வந்த ஜெயலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.