திருவாடானை அருகே திருட்டு மணல் பறிமுதல்

Wait 5 sec.

திருவாடானை அருகே சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருவாடானை அருகே மங்கலம் முதன்மைச் சாலைப் பகுதியில், சுமாா் 4 யூனிட் ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் கண்மாயில் மடை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஒப்பந்ததாரா்தான் இந்தத் திருட்டு மணலை வாங்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் தாமஸ் யூரிக்ககாரின் தலைமையில் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை சம்பவ இடத்துக்குச் சென்று அங்கே சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருந்த 4 அலகு ஆற்று மணலையும் பறிமுதல் செய்தனா். அவற்றை திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு அள்ளிச் சென்று பாதுகாப்பாகக் கொட்டி வைத்தனா். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.