தமிழ்நாடு நாள் விழா தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் 76 தமிழறிஞா்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது, திருக்கு முற்றோதல் செய்த 179 மாணவா்களுக்குப் பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்படவுள்ளன.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956 நாளை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவ.1-ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்’ விழாவாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கலந்துகொண்டு 5 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை செய்தமைக்கான நூலுரிமைத் தொகையை வழங்கவுள்ளாா். தொடா்ந்து, திருக்கு முற்றோதல் செய்த 179 மாணவா்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 76 அறிஞா்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகள் ஆகியவை வழங்கப்படவுள்ளன.மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்நாடு விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை மூலமாக நாட்டுப்புறக் கலைஞா்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் நடத்தப்படும். அதேபோன்று தமிழ்நாடு விழாவையொட்டி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு மாநில, மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களைப் பெறும் மாணவா்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.