கொளத்தூா் அருகே நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடி கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.மேட்டூா் வனச்சரகத்துக்கு உட்பட்ட அச்சங்காட்டில் சனிக்கிழமை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் கிராமத்திற்குள் நுழைந்தது. கிராமத்தில் நுழைந்த புள்ளிமான நாய்கள் துரத்தியது. நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடிய மான் ராசப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினா் கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானை பத்திரமாக நேற்று பாலமலை காப்பு காட்டி விட்டுச் சென்றனா்.