ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடி

Wait 5 sec.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை முற்றிலுமாக குறைந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.இந்நிலையில், வெள்ளிக்கிழமை 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 1,500 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றின் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.