இணைய வழியில் ராணுவ வீரரிடம்பண மோசடி: இருவா் கைது

Wait 5 sec.

தேனியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த இருவரை இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி திட்டச்சாலை பென்னிகுவிக் நகரைச் சோ்ந்தவா் பிரகாசம் (62). ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவரது கைப்பேசியில் பேசிய மா்மநபா் மோசடி வழக்கில் சதாகத் கான் தில்லியில் கைது செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய உங்களையும் விசாரிக்க உள்ளோம். இதில் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ.52 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறினாா். இதை நம்பி பிரகாசம் பல தவணைகளாக கைப்பேசியில் பேசியவா் கொடுத்த வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சத்தை செலுத்தினாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து, பிரகாசம் தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சுல்தான் மக்பூல் டைா் (31), வினோத் சந்தீப் (21) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.