அரசியல் நாகரிகத்தை மீறிய கார்கே? பாஜக கடும் கண்டனம்!

Wait 5 sec.

பிரதமர் நரேந்தி ர மோடிக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துகள் அரசியல் நாகரிகத்தை மீறியுள்ளன என பாஜக தலைவர் சுதிர் சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சியால் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்னைகளை எழுப்ப முடியவில்லை, அரசியல் கவனத்தை ஈர்ப்பதற்காக அக்கட்சி தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுகிறது. பிகாரின் முதல் முதல்வரான ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்கே கலந்துகொண்டார். அப்போது பிரதமர் எங்கும் செல்ல மாட்டார்.. ஆட்சியை விட்டு இறங்க மாட்டார் என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார்.​இதனால் நிதானமிழந்து கார்கே, மேடையிலேயே, மோடியை மட்டுமல்ல, அவருடைய அப்பாவாக இருந்தாலும் அனுப்புவோம் என்று தரக்குறைவான வார்த்தைகளால் ஆவேசமாகப் பதிலளித்தார். ​கார்கேவின் இந்தப் பேச்சால் அரங்கில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கார்கேவின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் திங்கள்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர். மேலும், கார்கேவும் காங்கிரஸ் கட்சியும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இத்தகைய கருத்துகள் ஒரு தேசிய அரசியல் கட்சிக்கு அழகல்ல, அவை அரசியல் விவாதத்தின் அடிப்படை நெறிமுறைகளை மீறும் வகையில் உள்ளன. இத்தகைய கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் விரக்தியையே காட்டுகின்றன. முக்கியமான மக்கள் பிரச்னைகளை எழுப்பத் தவறிய காங்கிரஸ், அரசியல் கவனத்தைத் தக்கவைத்துக் கொள்ள தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்! கொலீஜியம் பரிந்துரை