சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து விபத்து!

Wait 5 sec.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை திருவிடந்தையில் இருந்து தீவுத்திடல் வந்த 109ஏ பேருந்து, சென்னை உயர்நீதிமன்றம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலைத் தடுப்பில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சென்னை உய்ரநீதிமன்ற வளாகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் கார்கள் உள்பட 10 கார்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து விபத்துக்குள்ளான என்எஸ்சி போஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவல்துறையினர், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். Government bus accident near the Madras High Courtஒரு பக்கம் குழந்தைகள் மாயம்; மறுபக்கம் கைதிகள் தப்பியோட்டம்! உதயநிதி