புதுவையில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பண்டிகை போனஸ் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் வருகின்ற அக். 8 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், புதுவையில் உள்ள பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.2025 - 26 காலகட்டத்தில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 6 மாதங்கள் அரசுப் பணியிலிருந்தவர்கள் போனஸுக்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அதிகபட்சமாக ரூ. 7,000 வழங்கப்படும் என்று புதுவை அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை இல்லைதீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் ஆகியவற்றில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் அறிவிக்கப்படவில்லை.அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பை வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசு அறிவிக்கும்.இந்த நிலையில், இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.Bonus announced for government employees! Not in Tamil Nadu, but in Puducherry!ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு