கர்ப்பிணி செய்தியாளரை தள்ளிய விவகாரம்: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Wait 5 sec.

அக்டோபர் 12 அன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில், பெண் செய்தியாளரை ராகுல் காந்தி தள்ளிவிட்ட புகார் குறித்து அவரிடம் மற்றவர்களிடமும் உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு குறித்து முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு என்ன?வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தலைநகர் தில்லியில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதனிடையே தில்லியில் கடந்த அக். 12ல் உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மூன்று மாதக் கர்ப்பிணி செய்தியாளரை தள்ளிவிட்டதாக புதிய புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், ராகுல் காந்தி மற்றும் இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் புகார்தாரர் தரப்பில் கோரப்பட்டது.இந்த நிலையில், ​​கர்ப்பிணிப் பெண் செய்தியாளர் தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியும், மற்றவர்களிடமும் உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசியல் நாகரிகத்தை மீறிய கார்கே? பாஜக கடும் கண்டனம்!