தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் மார்கோ யான்சென் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய வீரர் ஜடேஜா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என சமநிலையில் இருக்கிறது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் மார்கோ யான்சென் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகள் 61 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் 85 ரன்கள் குவித்தார். இந்த அபாரமான ஆல்ரவுண் செயல்பாட்டினால் ஐசிசி தரவரிசையில் மார்கோ யான்சென் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவரது உச்சபட்ச டெஸ்ட் தரவரிசைக்கான புள்ளிகள் (451) என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்றாவது டெஸ்ட்டிலும் பேட்டிங் அரைசதம் அடித்தவர் பந்துவீச்சில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக ஜடேஜா முதலிடத்தில் இருந்ததை முறியடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை 1. மார்கோ யான்சென் 2. ரவீந்திர ஜடேஜா 3. மெஹிதி ஹாசன் 4. வியான் முல்டர் 5. மிட்செல் ஸ்டார்க் அதிரடி சதத்தைத் தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!Test All-rounder: Marco Jansen overtakes Jadeja to claim the top spot!