எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனு அனுப்பியுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதைத் தொடர்ந்து எஸ்ஐஆர் ரத்து, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை, மீண்டும் வாக்குச்சீட்டு முறை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து குடியரசுத் தலைவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனு அனுப்பியுள்ளார்.இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை? வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா? தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்! ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை, எஸ்ஐஆர் ரத்து மீண்டும் வாக்குச்சீட்டு முறை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன். வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை! ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும். நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும் என்று மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தொழிற்பயிற்சி நிலையங்களில் மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்த முதல்வர் விஜய்!DMK leader M.K. Stalin has sent a petition to President Droupadi Murmu, putting forward nine demands, including the cancellation of the SIR.