ஒர்னாப் புயல் கரையைக் கடந்த சூழலில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூட்டாக சுமார் 87,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கத் தொடங்கி புதன்கிழமை (அக். 28) அதிகாலையில் கரையைக் கடந்துள்ளது.இந்தப் புயலால், ஆந்திரம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒர்னாப் புயலின் பாதிப்புகளால் 31 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 57,000 பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரம் - யானம் கடற்கரைப் பகுதியில் ஒர்னாப் புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, ஒடிசாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாதிப்புகள் ஏற்படக் கூடியதாகக் கருதப்பட்ட இடங்களில் வசித்த சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்துடன், புயல் பாதிப்புகளால் ஆந்திரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரம் அருகே அமைந்துள்ள புதுச்சேரியின் யானம் பகுதியில் இருந்தும் 38 பேர் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒர்னாப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 39 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. கரையைக் கடந்த ஒர்னாப் புயல் தற்போது வலுவிழந்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் சில மாவட்டங்களில் வரும் அக்.31 ஆம் தேதி வரையில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!As Cyclone Ornab made landfall, it is reported that approximately 80,000 people across the states of Andhra Pradesh and Odisha were evacuated from their homes.