நிஜத்திலும் நான் சண்டைக்காரிதான்! பிக் பாஸ் காமன்மேன் ஷமா பேட்டி!

Wait 5 sec.

நிஜத்திலும் நான் சண்டைக்காரிதான் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷமா தெரிவித்துள்ளார். ரசிகர்களும் ஃபாலோயர்ஸ்களும் இருப்பதால் பிரபலங்களுக்கு எளிதில் வாக்குகள் கிடைத்துவிடுவதாகவும், போட்டியில் அளித்த பங்களிப்பின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்துடன் ஷமா வெளியேறினார். எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் வெளியேறியதால் அவர் மீது ரசிகர்களுக்கு சிறுது வருத்தம் இருந்தாலும், அதற்காக தான் கவலைப்படவில்லை என ஷமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தினமணி இணையதளப் பக்கத்துக்கு ஷமா அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸுக்குச் சென்றது பெருமையாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்கள் டாஸ்க் வரும்போது பதற்றம் அடைவார்கள். எனக்கு டாஸ்க் கொடுக்கமாட்டார்களா? என்று தோன்றும். ஜேசன் உண்மையாகவே புத்திசாலி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். அவனின் ஆதிக்கத்தை மற்ற போட்டியாளர்களிடம் கொண்டுவருவது அவன் இயல்பு. ஒருவனின் சிந்தனையில் விளையாட்டு இருந்தால், அதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது. பிக் பாஸுக்கு யாரும் தேவையில்லை. நமக்குதான் பிக் பாஸ் மேடை தேவை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை டிடிஎஃப் வாசனிடம் உண்டு. ஆனால், ஒரு வட்டத்திற்குள் இருந்து அதனைச் செய்ய முடியாது. நிஜத்திலுமே நான் சண்டைக்காரிதான். வீட்டில் இருக்கும்போது கூட யாருக்கும் அஞ்சுவது கிடையாது. அங்கு யாருடனும் சண்டையிடக் கூடாது என வீட்டில் இருப்பவர்களே எனக்கு அறிவுரை கூறிதான் அனுப்பினார்கள்.டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற போட்டியாளர்கள் விளையாடுவது தேவையற்றது. அவன் பலவீனத்தை பற்றி கவலைப்படாமல், நம் பலத்தை காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.பிரபலங்களின் ரசிகர்கள் போட்டியை கவனத்தில் கொள்ள வேண்டும். ரசிகர்கள் இருப்பதால் பிரபலங்களுக்கு எளிதாக வாக்குகள் கிடைத்துவிடுகின்றன. ஆனால், அவர்கள் போட்டியையும் பார்த்துவிட்டு வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். பிக் பாஸ் 10: முதல்முறையாக பெண் போட்டியாளருக்கு ரெட் கார்டு?bigg boss 10 tamil I’m a fighter in real life too Interview with Bigg Boss commoner Shama