66 ஆண்டுகளில் முதல்முறை..! நான்காம் தர அணியுடன் தோல்வியுற்ற பிரீமியர் லீக் சாம்பியன் ஆர்செனல்!

Wait 5 sec.

பிரிட்டனில் நடைபெறும் இங்கிலீஷ் ஃபுட்பால் லீக்ஸ் கோப்பை (இஎஃப்எல்) இறுதிப் போட்டியில் ஆர்செனல் அணியை ஃபிலீட்வுட் அணி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி, தொடரில் இருந்து வெளியேற்றியது.இஎஃப்எல் கோப்பைக்கான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்தர கால்பந்து போட்டியான பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் ஆர்செனல் அணியும் நான்காம் தர அணியான ஃபிலீட்வுட் அணியும் நேற்றிரவு மோதின.இந்தப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதில் 21ஆவது நிமிஷத்தில் ஆரோன் கோல் அடிக்க, ஆர்செனல் அணி சார்பில் 50ஆவது நிமிஷத்தில் விக்டர் கையோக்கர்ஸால் கோல் அடித்து சமன்படுத்தப்பட்டது. இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது. இதில் ஃபிலீட்வுட் 5-3 என வென்றது. 66 ஆண்டுகால வரலாற்றில் இதுபோல ஒரு தோல்வியை பிரீமியர் லீக் சாம்பியன் அணிகள் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியைப் பார்க்க 5,3000 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் திடலில் குவிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆர்செனல் அணியின் ப்ரூனோ குய்மரேஸ் அடித்த கோல் ஷூட் அவுட்டில் தடுக்கப்பட்டது. இதனால், ஆர்செனல் ரசிகர்கள் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ”மிகவும் வருத்தமான நாள்” என ஆர்செனல் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார். வென்ற அணியின் பயிற்சியாளர், “எங்கள் அணியின் வரலாற்றில் மிகப்பெரிய நாள்” எனக் கூறியுள்ளார். Every penalty from @ftfc’s HISTORIC win! #EFL | #CarabaoCup pic.twitter.com/wnrgfeZzZq— Carabao Cup (@Carabao_Cup) October 27, 2026 Scenes from the stadium as soon as Fleetwood eliminated Arsenal from Carabao Cup pic.twitter.com/HOPDeM7P82— The Final Whistle (@Rufus_45) October 27, 2026Carabao Cup: Arsenal embarrassed in penalty-shootout loss to 4th-tier Fleetwood in English League Cup stunner