மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ கீழ்த்தரமான செயல்: தவெக மீது திமுக புகார்

Wait 5 sec.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்பாக தவெகவினர் வெளியிட்ட சித்திரிப்பு விடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.கடந்த திமுகவின் ஆட்சியை கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினே அவமதித்துப் பேசும் வகையில் சித்திரிக்கப்பட்ட விடியோவை தவெகவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் குறித்த சித்திரிக்கப்பட்ட அவதூறு விடியோ தொடர்பாக தவெக மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களுடன் பரந்தாமன் பேசியதாவது, "மு.க. ஸ்டாலின் பேசிய காணொலியைத் திரித்து, திமுக மற்றும் மு.க. ஸ்டாலின் மீது களங்கம் விளைவிக்கும் வகையிலான காணொலியை தவெகவின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.கடந்த திமுக ஆட்சி மோசமாக இருந்ததாக மு.க. ஸ்டாலினே சொல்வதாகத்தான் சித்திரிப்புக் காணொலியை பார்க்கும் பாமரர்கள் நினைப்பார்கள். பொதுமக்களிடையே தவறான மற்றும் விஷமத்தனமான கருத்துகளை நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் செய்தது கிடையாது. இது ஒரு மோசமான மற்றும் கீழ்த்தரமான நடவடிக்கை.இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்விDMK files complaint seeking action over a manipulated video of M.K. Stalin released by TVK IT Wing