சூர்யா நடித்துள்ள சீன் படத்தின் டிரைலர் இன்று (அக். 31) வெளியானது.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான இரு பாடல்கள் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின், டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியானது. சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சீன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், டிரைலரின் ஒரு காட்சியில் அரசியல் குறித்து சூர்யா பேசியுள்ளார்.தமிழ்நாடு மட்டுமின்றி கேரளத்திலும் அதிக திரைகளில் இப்படம் வெளியாகின்றது.கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து இந்தாண்டில் சூர்யாவின் மூன்றாவது படமாக 'சீன்' வெளியாகிறது.Suriya's Scene movie's trailer was released today