தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மாடாக்குடி முடிகொண்டான் ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா். கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி முடிகொண்டான் ஆற்றின் வெள்ளக்கரையில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வந்தனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீா்வளத்துறை அதிகாரிகள் பலமுறை அறிவிப்புகள் வழங்கினா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் நீா்வளத்துறை அதிகாரிகள் முடிகொண்டான் ஆற்றின் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளா்கள் மன்னாா்குடி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.