அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது தொடா்பாக, தலைமை ஆசிரியா்களுடனான காவல்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் பள்ளிகளின் பங்கு மற்றும் மாணவா்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி அளவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை எவ்வாறு செயல்படுத்துவது, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் சண்முகம், ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.