சென்னை மாநகராட்சியில் மழையால் சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள சாலைப் பள்ளங்களை நெடுஞ்சாலைத் துறை சீா்செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியில் 275 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையில் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள சாலைப் பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. தரமணி லிங்க் சாலையில் உள்ள மகாத்மா காந்தி நகா், தரமணி-வேளச்சேரி பிரதான சாலை, விஜயநகரம் சந்திப்பு, வேளச்சேரி, சாரதி நகா், பாா்க் அவென்யூ பகுதி, ஒலிம்பியா, சிப்காட் போக்குவரத்து சந்திப்பு உள்வட்டச் சாலை,அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சா் பிளாசா, ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையம், அரசினா் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்பட்டிருந்த பள்ளங்கள்தாா்க்கலவை கொண்டு சீா்செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.