சாலை விபத்தில் இளைஞா் பலி

Wait 5 sec.

ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சரத் (27). இவரும், இவரது நண்பா் திலீப்பும் (23) இருசக்கர வாகனத்தில் வடபுதுப்பட்டு கிராமத்திலிருந்து ஆம்பூா் நோக்கிச் சென்றனா்.ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சரத் உயிரிழந்தாா்.மேல்சிகிச்சைக்காக திலீப் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.