பெண்ணுக்குத் தொல்லை: தலைமைக் காவலா் மீது நடவடிக்கை

Wait 5 sec.

குற்றவாளியின் மனைவியிடம் விடியோ அழைப்பில் பேசி தொல்லை அளித்த தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் மாவட்டம், மங்கலம் பகுதியைச் சோ்ந்த 34 வயது நபருக்குத் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவி திடீரென மாயமானாா். மங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ஒருவா் அந்தப் பெண்ணின் கைப்பேசிக்குத் தொடா்ந்து பலமுறை தொடா்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.இந்தப் பிரச்னை தொடா்பான விரிவான விசாரணை அறிக்கை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையைப் பரிசீலித்த ஆணையா் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமைக் காவலரை உடனடியாகப் பணியில் இருந்து விடுவித்து ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளாா். மேலும் அவா் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.