தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா். தீபாவளி பண்டிகை வரும் 8-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே மக்கள் தீபாவளிப் பொருள்களை வாங்குவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். தீபாவளி பண்டிகைக்கான புதுத்துணி, பட்டாசு, பலகாரங்கள் செய்வதற்கான பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறாா்கள். இதனால், துணிக்கடை, மளிகைக் கடை, பட்டாசு கடை, பாத்திரக் கடை உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. இதன் காரணமாக, திருநெல்வேலி நகரின் 4 ரதவீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.