ஒடிசாவில் நிலச்சரிவு: ஒன்பது மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி

Wait 5 sec.

ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஒன்பது மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதாக பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ரபி நாராயண் நாயக் தெரிவித்தார்.'ஒர்னாப்' புயலின் தாக்கத்தால் பெய்த பலத்த மழையின் காரணமாக, ரைகியா தொகுதிக்கு உட்பட்ட டங்கேசி கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர் கூறினார்.தீயணைப்புப் படையினர் இருவரை உயிருடன் மீட்டனர். பலியானவர்கள் அச்சுதா பிரதான் (30) மற்றும் அவரது மனைவி அனிஷா பிரதான் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குழந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அப்பகுதியில் உள்ள இடிபாடுகளை அகற்றுவதற்காக பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் நாயக் தெரிவித்தார்.Three members of a family, including a nine-month-old baby, died in a landslide in Odisha's Kandhamal district on Friday, a state minister said.அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது!