நெல்லையில் ரூ. 10-க்கு டாப்ஸ்! துணிக்கடையில் குவிந்த பெண்கள்!

Wait 5 sec.

நெல்லையில் உள்ள துணிக்கடை ஒன்றில் ரூ. 10-க்கு டாப்ஸ் விற்கப்பட்டதால் பெண்கள் கூட்டம் சனிக்கிழமை (அக். 31) அலைமோதியது.வரும் நப. 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ​நெல்லை டவுன் கணேஷ் தியேட்டர் பகுதியில் பெண்களுக்கான சிறிய அளவிலான புதிய துணிக் கடை ஒன்று இன்று தொடங்கப்பட்டது. இந்தக் கடையின் உரிமையாளர் டைசன், கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு வெறும் 10 ரூபாய்க்கு மகளிருக்கான சுடிதார் டாப்ஸ் வழங்கப்படும் என்ற அதிரடி சலுகை அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தச் சலுகை பற்றிய செய்தி அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல பரவியதால், கடை திறப்பதற்கு முன்பாகவே ஏராளமான பெண்கள் கடை வாசலில் திரளத் தொடங்கினர்.​கடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் போட்டிபோட்டுக் கொண்டு கடைக்குள் செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் உருவானது. ​அப்போது அந்த வழியாக வந்த நெல்லை டவுன் காவல்துறையினர் கடையை அடைத்து கடை உள்ளே இருந்த பெண்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மிகவும் சிரமத்தோடு கடைக்குள் இருந்த பெண்களை வெளியேற்றினர்.கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!A large crowd of women gathered at a clothing store in Nellai on Saturday (Oct. 31) as tops were being sold for Rs. 10 each.