நடிகர் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட திரைப்படமான நூறு கோடி வானவில் நிதி மற்றும் பல்வேறு காரணங்களால் தற்போது வரை வெளியாகவில்லை. இதில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் நாயகியாக சித்தி இத்னானியின் நடித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து இப்படம் திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வராமல் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர். காதலின் நடக்கும் நகைச்சுவைகளும் உணர்வுப்பூர்வமான விஷயங்களுமாக இதன் கதை எழுதப்பட்டுள்ளது. சித்து குமார் இசையமைத்த இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். The trailer for actor Harish Kalyan's film 'Nooru Kodi Vaanavil' has been released.