ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!

Wait 5 sec.

நர்சாபூர் - காக்கிநாடா இடையே ஏனாம் அருகே அதி தீவிர புயலாக ’ஒர்னாப்’ முழுமையாக கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல் கணிக்கப்பட்டதை விட முன்கூட்டியே செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திர மாநிலம் நர்சாபூர் - காக்கிநாடா இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே அதி தீவிர புயலாக கரையைக் கடக்கத் தொடங்கியது.புயல் கரையைக் கடக்கத் தொடங்கியவுடன் ஆந்திரம், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இரவு விடியவிடிய பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், ஒர்னாப் அதி தீவிரப் புயலாக முழுமையாக கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.மேலும், ஒர்னாப் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் கடல் சீற்றம்ஒர்னாப் புயல் நேற்றிரவு கரையைக் கடக்கத் தொடங்கியபோது, சென்னை எண்ணூர், மெரினா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, கடல் அலைகள் கடற்கரைச் சாலையைத் தாண்டி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் கடல் அலைகளின் தாக்கத்தால் கவிழ்ந்தது.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.Cyclone arnab has completely landfall and has begun to weakenஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம்!