டேர் டெவிலில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? ஆதிக் ரவிச்சந்திரன் பதில்!

Wait 5 sec.

டெர் டெவில் திரைப்படத்தின் நடிகர்கள் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.கடந்த இரண்டு ஆண்டாக தொடர்ந்து கார் பந்தயப் பயிற்சி மற்றும் போட்டிகளில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகமால் இருக்கிறது.இந்த நிலையில், டெர் டெவில் திரைப்படத்தின் பூஜை வருகிற நவ. 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் படப்பிடிப்பு தீபாவளி முடிந்து நவ. 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீலீலா, சுனில், பார்த்திபன், பிரபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா மற்றும் பாங்காக்கிலும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். புரமோஷனில் நஸ்ரியாவின் ஆடை கவர்ச்சியாக இருப்பதாக விமர்சனங்கள்..! இன்ஸ்டாவில் பதில்!Adhik Ravichandran has spoken about the cast of the film Daredevil.