நஸ்லன் மிகவும் புத்திசாலியான நடிகர்: ஜித்து மாதவன்

Wait 5 sec.

சீன் திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் நஸ்லன் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.டீசர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கான கிளிம்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ”சீன் திரைப்படத்தில் நடிகர் நஸ்லன் நடித்த கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர்களைத்தான் முதலில் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென நஸ்லனுக்குச் சொல்லலாமா என யோசித்து அவரிடம் சொன்னேன். அப்போது, பிரேமலு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், கதையைக் கேட்ட நஸ்லன் நடிக்க ஒப்புக்கொண்டார். முழுமையாகக் கதையைச் சொல்லவில்லை என்றாலும் இக்கதாபாத்திரம் ரசிகர்களிடம் எப்படி சென்று சேரும் என்கிற அந்தப் புரிதலும் அறிவும் நஸ்லனுக்கு நிறைய இருக்கிறது. மிகவும் புத்திசாலியான மனிதரும் கூட. நஸ்லனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியானதுதான்” எனத் தெரிவித்துள்ளார். அரசன் புதிய புரோமோவில் சந்தீப் ரெட்டி வங்கா! Film director Jithu Madhavan has spoken about actor Naslen.