மட்டஞ்சேரி மாஃபியா திரைப்படத்திற்கான நடிகர் ஆசிஃப் அலியின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது. இயக்குநர் கலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி தன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதில், பிரபல இளம் நாயகர்களான ஆசிஃப் அலி மற்றும் நஸ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு, மட்டஞ்சேரி மாஃபியா எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். ஆக்ஷன் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் ஆசிஃப் அலியின் புதிய தோற்றப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஆசிஃப் அலி இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மூக்குத்தி அம்மன் - 2 இதுவரை சந்திக்காத உழைப்பு: சுந்தர். சிActor Asif Ali's new look for the film 'Mattancherry Mafia' has been revealed.