நாடு தாக்குதலுக்கு உள்ளானதாக கருதும் அனைவரும் தில்லி பேரணியில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களின் ஒரு பகுதியாக வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது. தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் பேரணியில், நாட்டு மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”காவல்துறையைப் பற்றியோ, தடியடியைப் பற்றியோ கவலைப்படாதீர்கள். பாஜகவினர் தங்கள் தந்திரங்களைச் செயல்படுத்தத் துணியமாட்டார்கள், அதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை.இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், தேசத்தைக் காக்கவும் எங்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடப்போம். எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் அரசியல் கொள்கை எதுவாக இருந்தாலும் சரி, இந்தியா தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று நீங்கள் கருதினால் எங்களுடன் வந்து இணையுங்கள்.இது ஒரு மிகச்சிறப்பான பேரணியாக அமையும். இந்த நாட்டின் ஆன்மாவைக் காப்பதற்கான பேரணி. உங்கள் அனைவரையும் பேரணியில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.If you believe the nation is under attack, join the Delhi rally – Rahul’s callஇண்டி கூட்டணி பேரணிக்கு அனுமதி மறுப்பா? தில்லி காவல்துறை விளக்கம்