ஜோசியர் சொன்னதால் புழல் சிறைக்குச் சென்றாரா முதல்வர் விஜய்? இபிஎஸ் கேள்வி

Wait 5 sec.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தன்னுடைய ஜோசியர் பரிகாரம் செய்யச் சொன்னதால்தான், புழல் சிறைக்குச் சென்று ஆய்வு செய்தாரா? என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவெக ஆட்சி மற்றும் முதல்வர் விஜய் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த இந்த 6 மாதங்களில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. வீர வசனம் பேசும் நிர்மல் குமார், மின் துறை அமைச்சராக பொற்ப்பேற்ற பிறகே குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ததாகக் கூறி முந்தைய ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களை நிர்மல் குமார் ரத்து செய்தார்.ஜோசியர் சொன்னதைக் கேட்டுத்தான் பரிகாரமாக முதல்வர் விஜய் புழல் சிறைக்குச் சென்றிருந்தாரா? புழல் சிறையில் முதல்வர் ஆய்வு செய்த 20 நாள்களுக்குப் பிறகு இரண்டு பேர் தப்பியோடியுள்ளனர். குற்றம் செய்தவர்களையும் பிடிக்க முடியவில்லை. சிறையில் இருப்பவர்களையும் பாதுகாக்க முடியவில்லைசனி, ஞாயிறு என்றால் அரசு ஊழியர்கள் விடுமுறையில் இருப்பது போல முதல்வர் விஜய்யும் விடுமுறை எடுத்துவிடுகிறார். அரசு ஊழியர்களைப் போலவே தலைமைச் செயலகம் செல்கிறார், 6 மணிக்கு வீட்டுக்கு வருகிறார், சனி, ஞாயிறு விடுமுறை எடுத்துவிடுகிறார்.ஆறுகளில் நுரை வருவது குறித்துப் பேசிய அமைச்சருக்கு நோபல் பரிசுதான் தர வேண்டும். தமிழ்நாட்டில் நடக்கும் எந்தவொரு பிரச்னை குறித்தும் முதல்வர் வாய் திறப்பதில்லை, முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை.இந்த அரசால் விலைவாசியையா? குறைக்க முடியும். கைது செய்யத்தான் முடியும். முதல்வர் விஜய்க்கு ஜாக்பாட் அடித்தது போல, தனுஷ் தனக்கும் ஜாக்பாட் அடிக்கும் என்று நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. Did Chief Minister Vijay go to Puzhal Prison because an astrologer told him to? EPS asks