நாளை முதல் தீபாவளி மளிகைத் தொகுப்பு! எங்கு கிடைக்கும்? என்னென்ன பொருள்கள்?

Wait 5 sec.

சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் ரூ.200க்கு, பருப்பு உள்ளிட்ட பத்து பொருள்கள் அடங்கிய தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 9 நாள்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளைப் போல கூட்டுறவு அங்காடிகளும் செயல்பட்டு வருகின்றன.இந்த கூட்டுறவு அங்காடிகள் மூலம் சென்னையில் நாளை முதல் கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், எண்ணெய், மைதா உள்ளிட்ட 10 பொருள்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் மக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கப்படுவதால், தீபாவளிக்கு இனிப்புகள் செய்யவும், விலை உயர்வால் அவதிப்படும் குடும்பத்தினர் குறைந்த விலையில் மளிகைப் பொருள்களை வாங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.தீபாவளி பலகாரம் செய்வதற்கு தேவையான சமையல் எண்ணெய், நெய், மைதா, கடலை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்களும் இதில் இடம்பெறும் என்றும் இதன் மொத்த மதிப்பு ரூ.500 முதல் 600 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் கிட்டத்திட்ட 2.29 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு ரூ. 500 மதிப்பிலான மளிகைப் பொருள் தொகுப்பு வழங்க அரசுக்கு கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடிக்கு மேல் செலவாகும் என்றும் தெரிகிறது.