ஹெல்மெட்டை சுத்தம் செய்வது இனி எளிது! தானியங்கி இயந்திரம் அறிமுகம்!

Wait 5 sec.

இருசக்கர வாகன ஓட்டிகளின் தலைக்கவசத்தை (ஹெல்மெட்) சுத்தம் செய்யும் வகையில் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.இந்த இயந்திரத்தின் மூலம், எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாமல் வெறும் 4 நிமிடங்களில் தலைக்கவசம் சுத்தம் செய்யப்படுகிறது. மைசூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெல்மிஃபை என்ற புத்தாக்க நிறுவனம், இருசக்கர வாகன ஓட்டிகளின் தலைக்கவசத்தை தூய்மையாக்கும் வகையில் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரத்துக்கு ஹெல்மிஃபை எனப் பெயரிடப்பட்டுள்ளது.சுத்தம் செய்யப்படுவது எப்படி?இந்த இயந்திரத்தில் நான்கு முறைகளைப் பயன்படுத்தி தலைக்கவசம் சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் யுவி முறையில் கிருமிகள் நீக்கப்படுகின்றன. இரண்டாவது, ஓசோன் ஆக்சிஜனேஷன் மூலம் கிருமிகள் நீக்கப்படுகின்றன. அதாவது மிதமான வெப்பத்தில் ஆக்சிஜன் வாயு செலுத்தி சுத்தம் செய்யப்படும். மூன்றாவது, அதீத வெப்பத்தில் நீராவி செலுத்தி சுத்தம் செய்யப்படும்.நான்காவது, வெப்ப உலர்தல் முறையில் விரைவில் ஈரப்பதம் வெளியேற்றப்படும். இந்த நான்கு முறைகளைப் பயன்படுத்தி தலைக்கவசம் சுத்தம் செய்யப்படுகிறது.5 நிமிடங்களில் இந்த நான்கு முறைகளையும் பயன்படுத்தி சுத்தம் செய்வதற்கு ரூ.49 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 நிமிடங்களில் (ஆழ்ந்த சுத்தம் - டீப் கிளீன்) சுத்தம் செய்வதற்கு ரூ. 79 கட்டணம்.அட்வான்ஸ் கிளினிங் செய்ய 6 நிமிடங்கள் தேவைப்படும். இதற்கு ரூ. 99 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பெட்ரோல் நிலையங்கள், இருசக்கர வாகன சர்வீஸ் சென்டர்கள், வணிக வளாகங்களில் இந்த இயந்திரத்தைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.ஐபோன் விலையில் இன்ஃபினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ! கேம் பிரியர்களுக்கான அம்சங்கள்!Cleaning helmet is now easy Helmify is building automated helmet cleaning station