2 பேர் சரண்! தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பிய 17 பேரும் பிடிபட்டனர்!

Wait 5 sec.

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய சகோதரர்கள் திருப்பதி, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கூடலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த நிலையில், சிறையில் இருந்து தப்பிய 17 பேரும் பிடிபட்டுள்ளனர்.ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 200 கைதிகளை அடைப்பதற்கான வசதி மட்டுமே உள்ளது. ஆனால், 332 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் உள்ள விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 3-ஆவது அறைக் காவலர் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பாா்த்தார். அப்போது, அந்த அறையிலிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 பேர் சேர்ந்து ஸ்டாலின் பிரபுவைத் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனர். இவர்களை பிரதான நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் தங்கப்பாண்டி தடுத்து நிறுத்தினார். ஆனால், அவரையும் கைதிகள் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சாவியைப் பறித்து, நுழைவு வாயிலை திறந்து தப்பிச் சென்றனர்.இதையடுத்து, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறையில் உள்ள வாகனங்கள் செல்லும் சாலை, முக்கிய இடங்கள் போலீஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.தொடர்ந்து, தப்பியோடிய விசாரணைக் கைதியான நவீன் மீண்டும் சிறையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தார். மற்ற கைதிகளை போலீஸார் தேடி வந்த நிலையில், திருமலாபுரம் மலைப் பகுதியில் சுற்றி வந்த தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரை மேலமடையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து, சிறை எதிரேயுள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கைதி லிங்க பிரசாத் ஆட்டோவில் ஏறிச் சென்ற போது, ரோந்துப் பணியிலிருந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.இதனிடையே, சிறையின் பின்னால் உள்ள மலைப் பகுதியில் ட்ரோன் மூலம் போலீஸார் கண்காணித்தனர். அப்போது, மலைப் பகுதியில் சுற்றிய மதுரை சிந்தமாணியைச் சேர்ந்த சோலை முகிலேஸ்வரன், சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி, ஜெய்ந்த்புரத்தைச் சேர்ந்த காா்த்திக் ராஜா, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நிஷாந்த், வாடிப்பட்டியைச் சேர்ந்த முத்து இளங்கோவன், சிவங்கையைச் சேர்ந்த தருண்குமார், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த பாண்டிச்செல்வம், சேலம் தாதகாபட்டியைச் சேர்ந்த சபரிநாதன் ஆகிய 8 பேரைக் கைது செய்தனர். மேலும் இருவரை, காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.இந்த நிலையில், தேனி சிறையில் இருந்து தப்பியோடிய சகோதர்கள் மதுரை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், மதுரையைச் சேர்ந்த திருப்பதி ஆகிய இருவர் கூடலூர் காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்தனர்.தப்பியோடிய 17 பேரில் 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இருவரும் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Brothers Thirupathi and Meenakshisundaram, who had escaped from Theni prison, surrendered at the Gudalur police station.தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!