ரூ. 100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் அப்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழியை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தலைமறைவாக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் உடனான தொடர்புகள், யார் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது, வேறு யார் இதில் இடைதரகர்களாக செயல்பட்டுள்ளனர், பணப்பரிமாற்றங்கள் குறித்தும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு நாளை (அக். 29) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு குறித்து காவல் துறை தரப்பில் முறையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.The Central Crime Branch police have filed a petition in a special court in Chennai, seeking permission to take former minister Anbil Mahesh Poyyamozhi—who was arrested in a case involving the receipt of a Rs. 100 crore bribe—into police custody for five days for interrogation.ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைப்பு! நவ. 6 வரை நீதிமன்றக் காவல்