நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு! காரணம் என்ன?

Wait 5 sec.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை நாட்டில் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் குறைவான சலுகை மற்றும் அதிகப்படியான விலையே விற்பனை சரிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.இந்த நிலை நீடித்தால் ஐபோன் விற்பனை எண்ணிக்கை 2 இலக்கங்கள் குறையும். கடந்த ஆண்டு 1.43 கோடி ஐபோன்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு இந்த விற்பனையானது இரண்டு இலக்கங்கள் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் ஐபோன் 18 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் பழைய ஐபோன்களின் விலை குறைக்கப்படவில்லை. பொதுவாக புதிய மாடல் அறிமுகமானால், பழைய மாடல்களின் விலை குறைக்கப்படுவது இயல்பானது. ஆனால், இம்முறை ஆப்பிள் தரப்பில் இருந்து அத்தகைய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. விலை குறைப்பு இல்லாததும், புதிய சலுகைகள் அறிவிக்கப்படாததும், புரமோஷன்கள் செய்யாததும் பண்டிகைகால ஐபோன் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாக சில்லறை வணிகர்களால் பார்க்கப்படுகிறது. ஹெல்மெட்டை சுத்தம் செய்வது இனி எளிது! தானியங்கி இயந்திரம் அறிமுகம்!Apple iPhone sales fall up to 30% in India as high prices curb festive demand