ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து! 30 பேர் பலி!

Wait 5 sec.

ஸ்பெயின் நாட்டில், அதிவேக ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலின் மீது மோதிய விபத்தில் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலெடோவில், புதன்கிழமை (அக். 28) காலை மாட்ரிட் நகரத்தில் இருந்து செவில் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அந்த ரயில்களில் பயணித்த சுமார் 30 பேர் பலியானதாக, ஸ்பெயின் அரசின் தொலைக்காட்சியின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விபத்தால் மேட்ரிட், சியூடாட் ரியல் மற்றும் அண்டாலுசியா நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஆர்.இ.என்.எஃப்.இ. ரயிலில் 397 பயணிகளும், ஐ.ஆர்.வொய்.ஓ. ரயிலில் 147 பயணிகளும் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்தில் ஏராளமான பயணிகள் படுகாயமடைந்து அப்பகுதியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயணைப்புப் படையுடன் இணைந்து அவசர ராணுவப் பிரிவையும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தெற்கு ஸ்பெயினில் கடந்த ஜனவரி மாதம் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரயில் ஒன்று மற்றொரு ரயிலுடன் மோதிய விபத்தில் 45 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தேர்தல்! நெதன்யாகுவுக்கு எதிராக அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு? In Spain, it has been reported that 30 people were killed when a high-speed train collided with another train that was stationary.