தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில், 4 பேரை காவல் துறை பிடித்துள்ளது.தேனி மாவட்டம், கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை உள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடினர். தாக்குதலில் சிறையின் இரண்டாம் நிலைக் காவலர் தங்கப்பாண்டி பலத்த காயமடைந்தார். அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். மேலும், இரு காவலர்கள் லேசான காயமடைந்தனர்.இதுகுறித்து, சிறைக் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனர்.இந்த நிலையில், அடுத்தடுத்து 4 பேரை காவல் துறையினர் பிடித்துள்ளனர். தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.Of the 17 prisoners who escaped from the Theni District Prison, 4 have been apprehended by the police.சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. சிறையில் முதல்வர் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!