இந்தியா - நியூஸிலாந்து மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம், வெலிங்டனில் செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வென்றுள்ள இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.மறுபுறம், சொந்த மண்ணில் விளையாடும் நியூஸிலாந்து, தொடரில் தன்னை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.