திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதன்கிழை நடைபெற்ற வாராந்திர கால்நடை சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. இந்தச் சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்தாலும் தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாள்களே இருப்பதால் விற்பனை மந்த நிலையில் நிறைவடைந்தது. இது வியாபாரிகளுக்கும், கால்நடை விவசாயிகளுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.