அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Wait 5 sec.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றுபவா்கள் தமிழ்நாடு அரசின் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அரிய தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கா் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் நிகழாண்டுக்கான விருதை பெற விரும்பும் தகுதியுடையோா் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது மாவட்ட ஆட்சியரக 2-வது தளத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றோ பூா்த்தி செய்து, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் அக். 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04364-290765 என்ற தொலைபேசி மற்றும் க்ஹக்ஜ்ா்.ம்ஹ்ப்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம்.