தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா: நவ.2-இல் சந்தனக்குடம் ஊா்வலம்

Wait 5 sec.

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குடம் ஊா்வலத்துடன் தொடங்குகிறது. காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கந்தூரி விழா முக்கிய நிகழ்வுகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குட ஊா்வலத்துடன் தொடங்குகிறது. 3-ஆம் தேதி ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், சிறிய கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் பள்ளிவாசல் முன்பு நிறுவப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்துவருகின்றனா்.