ஆம்னி பேருந்துகளில் அரசு நிா்ணயித்த விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், அபராதம் விதிப்பதுடன் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.சேலத்தில் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளை புதன்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:ஆட்டோ ஓட்டுநா்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோக்களுக்கு மீட்டா் கட்டணம் நிா்ணயிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வா் ச. ஜோசப் விஜய் மேற்கொண்டாா். இதன்மூலம் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநா்களும், அவா்களைச் சாா்ந்த பல லட்சம் பேரும் பயன்பெறுவா்.ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், அனைத்து பேருந்துகளையும் ஒருங்கிணைத்து முன்பதிவு செய்யும் வசதியுடன் தனிச் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதுடன், அவற்றைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். விழாக் காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் பேருந்து நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.