சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தப்பியோடிய விசாரணை கைதிகள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ஆட்டையாம்பட்டியை அடுத்த கண்டா்குலமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த பிரபு, சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸாா் அவா்களை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அழைத்து வந்தனா்.பின்னா், அவா்களை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கான பணிகளை போலீஸாா் மேற்கொண்டனா். இதை அறிந்த இருவரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பினா். அவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை கண்டா்குலமாணிக்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபு, சந்தோஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.