வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மணிகண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. ஹிந்து மதக் கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் மணிகண்டா. இப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ’மாளிகைபுரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார்.தாந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் வெங்கட் பிரபு பணியாற்றியுள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.மணிகண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. ஐயப்பன் வேடத்தில் வைபவ் நின்றிருக்கும் போஸ்டரில் ’இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மணிகண்டா பட போஸ்டர்ஓம் சாய் பல்லவி கிளிம்ஸ்! The first look poster of Vaibhav's upcoming film Manikanda was released today.