தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி மற்றும் பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.அவரது கைது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கைது செய்தது தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 1. B.T. அரசகுமார், 2. சுரேஷ் மற்றும் 3. ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக, அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ரூ. 100 கோடி மோசடி வழக்கு! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!The Chennai Central Crime Branch police have issued a statement regarding the arrest of former minister Anbil Mahesh.