சென்னையில் ரூ. 5,000 கோடி நிதி மோசடி வழக்கில் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் நிறுவனத் தலைவரை கேரள காவல்துறை கைது செய்தனர்.கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர், பிரேம்குமார். இவர் முதியோர், ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 2006-ல் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (பிஎல்எம்) ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயும் திரட்டினர்.இருப்பினும், முதிர்வுக் காலம் முடிவடைந்த பின்னரும் மக்களுக்கு உரிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பிஎல்எம் நிறுவனத்தின் மீது புகார்கள் வந்தன. இதனிடையே, மக்களின் கோடிக்கணக்கான பணத்தை கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக, தன்னுடைய சொந்த வங்கிக் கணக்குகளிலும் குடும்பத்தினர் பெயர்களிலும் மற்றும் பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் முறைகேடாக பயன்படுத்தியதாக பிரேம்குமார் மீது புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டின.இந்த நிதி மோசடி வழக்கு தொடர்பாக, சென்னையில் பிரேம்குமாரை கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இருப்பினும், அதிகாரிகள் கைது செய்யப்படும் நேரத்தில் பிரேம்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தற்போது நுங்கம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் பிரேம்குமாரை கேரளம் அழைத்துச் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் இருக்கும் பிரேம் குமார், சமீபத்தில் மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யை சந்தித்தார்.முதல்வர் விஜய் ஏன் பசும்பொன் செல்லவில்லை? வைகோ விளக்கம்BLM Credit Society chairman Prem Kumar held in Chennai over alleged fund diversion