அந்தமான் கடலில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு!

Wait 5 sec.

அந்தமான் கடல்பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவின் தெற்கு அந்தமான் மாவட்டத்தில் இருந்து வடமேற்கு திசையில் 218 கி.மீ. தொலைவில் கடல்பகுதியில், வியாழக்கிழமை (அக். 29) மாலை 3.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலநடுக்கம் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், 10 கி.மீ. ஆழத்தில் மட்டுமே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை காத்திருங்கள்! தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் அதிரடி!an earthquake measuring 5.1 on the Richter scale has occurred in the Andaman Sea region.