தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 103 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை புதன், வியாழன், வெள்ளிக்கிழமை (அக்டோபா் 28, 29, 30) ஆகிய 3 நாள்கள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (அக்டோபா் 29) அரசியல் விழாவாகவும், வெள்ளிக்கிழமை (அக்டோபா் 30) அரசு விழாவாகவும் தேவர் குருபூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்திமீனாள் அம்மாள், தங்கவேல், பழனி, ராஜா உள்ளிட்டோர் செய்து வருகின்றனா்.இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சியினர், சமுதாய அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமாா் அகர்வால் (டிஜிபி) தலைமையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 4 டிஐஜி-க்கள், 30 எஸ்பி-க்கள், 80 டிஎஸ்பி-க்கள், 35 ஏடிஎஸ்பி-க்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, பசும்பொன் செல்லும் வழியில் உள்ள 103 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.In observance of Thevar Guru Puja, a holiday has been declared for 103 government and private schools in Ramanathapuram district.முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!